Saturday, December 03, 2011

”இதயத்தின் ஓரத்தி..!”


இதயத்தின் இடவலம் மாற்றிய இன்னமுதே..!
இனிக்க இனிக்க இன்பம் பேசிய என்னுயிரே..!
கனிந்து சுவைத்து ருசித்த காதல்
கசப்பாய் போகும் மாயம் என்ன..?

கண்களை திறந்தால் காதுகள் அடைக்கிறாய்
காதுகள் திறந்தால் கண்கள் அடைக்கிறாய்
உறுப்புகளால் உண்மைகள் தேடுகிறாய்...!
அறிவின் ஆற்றல் ஆற்றாமையாய் கிடக்கிறது.

இலவச இணைப்பில் எப்போதும் நானோ..!
இல்லாத பொழுதுகளில் ஊறுகாய் தானோ..!
சொல்லாத உணர்வுகள் கொல்லும் நினைவுகளை
பொல்லாத மனம் புரியாதது ஏனோ..?

மனதின் ஊடறுத்த உணர்வுகள் உனைத்
தேடும் வேதனை அறியாயோ..? தேடல்
யாவும் தெரிந்தும் ஓரமாய் ஒதுங்கும்
மர்மம்தான் என்ன..? மாறாயோ..?

இழப்புகள் ஒன்றே வழக்கம் என்றானபின்
இழப்பதையே பழக்கமாக்கி கொள்ள
பக்குவமில்லா மனதுக்கு பாடம் நடத்துகிறேன்.
பண்படாமல் அது தினமும் புண்படுகிறதே...!!

வார்த்தைகளில் வைரத்தை வைத்து என்
இதயத்தை கீறுகிறாய்...! - கொப்பளிக்கும் குறுதியால்
உன்பெயர் எழுதும் இதயத்தை என்செய்ய..?!
வலிகளில் வீழ்வதும் வலிகளில் வாழ்வதும்

வாடிக்கை என்றானபின் வேடிக்கை பார்க்கிறேன்
வேதனைகள் மறைத்தபடி....! நடக்கட்டும் நாடகம்.
நல்லதொரு முடிவுக்காய் கொட்டும் பனியிலும்
குடையின்றி காத்திருக்கும் சின்ன இதயத்தை

சிதையும் முன் காணாயோ....? என் பைங்கிளியே..!


2 comments:

பிரேமி said...

”இழப்புகள் ஒன்றே வழக்கம் என்றானபின்
இழப்பதையே பழக்கமாக்கி கொள்ள
பக்குவமில்லா மனதுக்கு பாடம் நடத்துகிறேன்.
பண்படாமல் அது தினமும் புண்படுகிறதே...!!” பட்டை தீட்டிய வரிகள். பலமுறை படித்து பலவீனமாகின்றேன்... ஆயினும் பலவீனத்தையே விரும்புகிறேன்... பட்டை தீட்டிய வரிகளில் பட்ட பாடெல்லாம் கண்முன்னே காட்சியாய்....:-((

நாவலந்தீவு said...

இதய வலியின் ஆற்றாமை ....
இயல்பாய் நடக்கும்
இதயத்தின் கீறல்...
கவிதை அருமை.