Wednesday, December 15, 2010

"மௌனம் கலைக்காதே...!!"



புனிதத்துக்குரியவளே....

நான் மௌனமாயிருக்கிறேன்.
காந்தவிழிப் பார்வையில்
கலைத்துவிடாதே...
என் மௌனம்...!!

உடைந்தவிழும் என்
பிரபஞ்ச நேசத்தில்
மூச்சுத் திணறி
மூழ்கிவிடுவாய்....!

நெஞ்சில் சுமக்கும் நேசமே...

விழிகளின் விடியல்கள் நீ..!
மோனப் புன்னகையில்
மோதி உடைக்காதே....
மிருதுவான இதயம்...!!

நினைவுகளில் சிம்மாசனமிட்டவளே...

கனவுகளிலேனும்...
கைக்கோர்த்து கொள்...!
உயிர் பெரும் என்
உணர்வுகள்....!!

பேரன்பு பெட்டகமே....

பிழையிருப்பின் பொருத்தருள்.
பிழையிருக்காது அன்பில்.
பிழைத்திருக்க செய்....! - என்
பிரியங்கள்...!!

ஆன்ம நேசமே....   

ஆன்மக் குடிலில்
அன்பைக் குடியமர்த்த
அழைப்பு விடுக்கிறேன்.
"வாராயோ"- என் வசந்தமே...!!

இன்பங்களின் இருப்பிடம் நீ....

என் கவிதைகளின் கருப்பை நீ...
என் தமிழ்ச் சிந்தனை நீ...
என் சுயம் நீ...
சுகந்தமே...!
சொர்க்கம் சமை..!!

உயிரில் ஊஞ்சலாடும் பேரழகே....

உன்னதங்கள் யாவும்...
உனக்காய் வைத்திருக்கிறேன்.
என்னருந்தமிழே...!
சின்ன சின்னக் கவிதைகளில்
நேசம் நிறைக்கிறேன்...!!

காணாத் தேசத்து கலை எழிலே...

உன் நிழலின் பிம்பங்களில்
உயிர்த் தரிக்கிறேன்.
மௌனமே...! மெல்ல நட
பாதங்களில் படப் போகிறேன்...!          

இன்னமும் இருக்கிறேன்......
"எதற்கு?" எனத் தெரியாமலே...
****************************************

4 comments:

Paul said...

//கனவுகளிலேனும்...
கைக்கோர்த்து கொள்...!
உயிர் பெரும் என்
உணர்வுகள்....!!//

//இன்னமும் இருக்கிறேன்......
"எதற்கு?" எனத் தெரியாமலே..//

ரசிக்க வைக்கின்றன இந்த வரிகள்..!!

Chitra said...

உன்னதங்கள் யாவும்...
உனக்காய் வைத்திருக்கிறேன்.
என்னருந்தமிழே...!
சின்ன சின்னக் கவிதைகளில்
நேசம் நிறைக்கிறேன்...!!

......மென்மையான அழகு!

THOPPITHOPPI said...

அருமை

Philosophy Prabhakaran said...

இந்த கவிதை அருமை... தலை நிமிருமா என்ற தலைப்பில் நீங்கள் எழுதியிருந்த முந்தய கவிதையை படித்தேன்... அற்புதமாக எழுதியிருந்தீர்கள்... அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கவிதை... கலக்குங்க...